கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க புதிய நிர்வாகசபைத் தெரிவு.

சாவகச்சேரி நிருபர்

 

தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு(ஜே/301) கிராம அபிவிருத்திச்சங்கத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு 19/11 சனிக்கிழமை பிற்பகல் கோவிற்குடியிருப்பு கடற்கரை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
தென்மராட்சிப் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் லலிதசங்கர் தலைமையில் இடம்பெற்ற புதிய நிர்வாகசபைத் தெரிவில் தலைவராக மரிய பேர்னால்ட், செயலாளராக க.தர்சன்,பொருளாளராக த.சுபேசன்,உப தலைவராக சரவணமுத்து,உப செயலாளராக பூமிசேகரம் மற்றும் கணக்கு பரிசோதகராக கபிலன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
புதிய நிர்வாகசபைத் தெரிவு நிகழ்வில் கோவிற்குடியிருப்பு கிராம அலுவலர் ஞானசேந்தன்,நகரசபையின் வட்டார உறுப்பினர் பவுலினா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.