இராஜாங்க அமைச்சரை எம்.பி என்று அழைத்த சபாநாயகர் கோபமடைந்த இராஜாங்க அமைச்சர்

சமீப காலங்களில் பெறுமதியான பேச்சுக்களை விட அதிக சண்டைகளையும் வாதங்களையும் எதிர்கொள்ளும் இடமாக மாறியிருக்கிறது இலங்கையின் பாராளுமன்றம், இன்று சபாநாயகர் எம்.பி என்று அழைத்ததற்காக அரச அமைச்சர் ஒருவர் கோபமடைந்து தர்க்கத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்தேறியது .

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன எம்.பி என தவறாக அழைத்ததையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

சபாநாயகரே, நான் எம்பி இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு இராஜாங்க அமைச்சு வழங்கியுள்ளார். இது உங்களுக்குத் தெரியாதா? எனவே தயவு செய்து என்னை எம்.பி. என அழைக்க வேண்டாம். பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின் படி செயற்படுங்கள். ” என்று அவர் சாடினார்.

இராஜாங்க அமைச்சர் கூறியதை கேட்டு சிரிப்பை அடக்க முடியாத சபாநாயகர் சாமராவின் கோபத்தை தணிக்க மன்னிப்பு கோரினார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.