வவுனியாவில் பேருந்து – டிப்பர் மோதி கோர விபத்து..! 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24) காலை பேருந்து மற்றும் கனரகவாகனம் (டிப்பர்) மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (24) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும், மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 

 

வவுனியாவில் பேருந்து - டிப்பர் மோதி கோர விபத்து..! 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் | Accident Vavuniya Many People Critical Condition

விபத்தில் டிப்பர் வாகன சாரதி உட்பட பேருந்தில் பயணித்த பயணிகளும் காயமடைந்த நிலையில் 6பேர் மாங்குளம் மற்றும் 4பேர் வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராஜன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.