பாராளுமன்ற வரவு -செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்துக்கு அனுமதி

பாராளுமன்ற வரவு -செலவுத் திட்ட அலுவலகம் அமைப்பதற்கான வரைவு சட்டமூலத்துக்கு கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல் குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த சட்டமூலத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

பாராளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை ஸ்தாபிப்பது தொடர்பான வரைவு சட்டமூலம் தொடர்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக
பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குழுநிலையின் போது மேலும் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் செய்வதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்