இலங்கை ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகள் வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்!

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாத ஆசிரியைகள் தொடர்பில் ஆய்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

 

இலவசமாக புடவைகள்

இலங்கை ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகள் வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்! | School Teachers Dress Code Issue Sri Lanka

இதற்கமைய, புடவை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் வேறு ஆடைகளை அணிந்து பாடசாலை செல்ல நேரிட்டுள்ளதாக ஆசிரியைகள் விசனம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இவ்வாறான வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகளை வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாள்தோறும் புடவை அணிந்து செல்வதனால் ஏற்படக் கூடிய செலவினை தவிர்க்கவே சில ஆசிரியைகள் வேறு ஆடைகளை விரும்புகின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.