பிரித்தானியாவில் இருந்து ரணிலுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி

இலங்கையில் 2024 ஆம் ஆண்டிற்கு முன்னர் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக பிரித்தானியாவின் தி எக்கனமிஸ்ட் நாளிதழ் எதிர்வுகூறியுள்ளது.

2023 இன் முன்னால் உள்ள உலகம் என்ற தனது புதிய வெளியீட்டில் தி எக்கனமிஸ்ட் நாளிதழ் இதனை தெரிவித்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சி

பிரித்தானியாவில் இருந்து ரணிலுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி | Prediction On Sri Lanka Elections 2024 Deadline

இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் ஆண்டு வீழ்ச்சியடையும் என்ற போதிலும், இந்த ஆண்டை விட மோசமானதாக இருக்காது என தி எக்கனமிஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்கா அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க மக்களின் அதிருப்தியை கட்டுப்படுத்துவதற்கு சிரமங்களை எதிர்நோக்குவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல்

பிரித்தானியாவில் இருந்து ரணிலுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி | Prediction On Sri Lanka Elections 2024 Deadline

 

ராஜபக்ச குடும்பத்தின் சகாவான தினேஸ் குணவர்த்தனவை ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் ரணில் விக்ரமசிங்கவை ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசியாக நோக்குவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் எனவும் அதனால் 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தல்கள் இடம்பெறும் எனவும் தி எக்கனமிஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.