இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது -ரோஹித அபேகுணவர்தன
இலங்கை மின்சார சபை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை 1 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ள நிலையில், இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“இந்நாட்களில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் நாட்டின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் இருப்பதையும் அது மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. எரிபொருள் மற்றும் பொருட்களின் விலை அதிகரித்துள்ள இவ்வேளையில் மீண்டும் அதிகரித்தால், இதனை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. பல ஊடக அறிக்கைகள் இலங்கை மின்சார சபையின் ஒகஸ்ட் 10 முதல் நவம்பர் 30 வரை 1 பில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அறிக்கைகள் சரியாக இருந்தால், மின் கட்டணத்தை அதிகரிக்க இது சரியான நேரம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் மின்வெட்டு அமுல்படுத்தும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நம் நாட்டில் சுற்றுலா வளர்ச்சி பெறும் காலம் இது. எனவே சுற்றுலாப் பயணிகள் வருகையின் போது தமது நேரத்தை செலவிட விரும்புகின்ற பிரதேசங்களில் மின்சாரம் தடைபடுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திடமும் அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்திருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை