முதலீடுகள் தொடர்பில் இலங்கை, மாலைதீவு கலந்துரையாடல்
மாலைதீவு துணை ஜனாதிபதி பைசல் நசீம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்திற்க் கொண்டு, இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைதீவுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கையுடன் கைகோர்க்குமாறு மாலைதீவுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போதைப்பொருள் எதிர்த்துப் போராடுவதற்கு மாலைதீவின் உதவியை நாடியுள்ளார்.
ஜூலை போராட்டத்தின் போது அழிக்கப்பட்ட ஜனாதிபதியின் இல்லம் புனரமைக்கப்பட்டவுடன் மாலைதீவு ஜனாதிபதியை இலங்கைக்கு வரவழைக்க உத்தேசித்துள்ளதாகவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க மாலைதீவு உப ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை