வேட்புமனுத்தாக்கல் அறிவிப்பு ஜனவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பை ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (23) தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றதுடன், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு கோரும் திகதி மற்றும் வேட்புமனுவை ஏற்கும் காலம் தொடர்பான அறிவிப்பு டிசம்பர் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார்.

இதேவேளை, பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் நேற்றுக் காலை கொழும்புக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர்களுக்கு உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.