பெரியபோரதீவு பாரதி மகா வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/பட் பெரியபோரதீவு பாரதி மகா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மற்றும் புத்தகப்பை, பாதணிகள் வழங்கும் நிகழ்வானது
23/12/2022 காலை 10.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.கணபதிப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும்…
இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது அவர்களின் இருப்பிடம் தேடி அவர்களது கல்வியில் அக்கறை காட்டி மாணவர்கள் வறுமையின் காரணமாக மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகாமல் அவர்களை பாடசாலைக்கு தினமும் சென்று கல்வியை கற்க வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் “ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் எண்ணக்கருவிற்கு அமைவாக மாணவர்களின் எண்ணங்களில் இதனை விதைத்துள்ளது.

மேலும் …

இம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம், புத்தகப்பை மற்றும் பாதணி வழங்கும் இன் நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. அருள்ராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேலும் பாடசாலையின் பிரதி அதிபர் திரு.தில்லையம்பலம் ஏகணாதன், ஆசிரியர் திரு.வல்லிபுரம் ஏனுகோபன்,பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.ஆறுமுகம் வேலாயுதம், முனைத்தீவு சக்தி மகா வித்தியாலய அதிபர் திரு.சுப்பிரமணியம் உதயகுமார் அவர்களும், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன், திரு.எஸ்.காந்தன், திரு.நா.சனாதனன், செல்வி.த.பரணிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இணைந்த கரங்கள் அமைப்பினரால் மட்/பட் பாரதி மகா வித்தியாலய பாடசாலையில் தரம் 01 தொடக்கம் தரம் 12 வரை கல்விகற்கும் 70 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இணைந்த கரங்கள் உறவுகளினால் 24/12/2022 அன்று அதிதிகள் மற்றும் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை, பாதணிகள் வழங்கி வைத்தனர்.

இன் நிகழ்விற்கு அனுசரனை அமரர் தர்மதுரை கிருசாந் அவர்களின் ஞாபகார்த்த நினைவாக இன்று அவரது தாயார் அவர்களினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை, பாதணிகள் திருமதி.நடராசா யோகேஸ்வரி அம்மையாறினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.