இலங்கையில் ஏடிஎம்களில் இருந்து 10.6 மில்லியன் ரூபா திருட்டு

பத்தேகம, ஹிக்கடுவ மற்றும் கராபிட்டிய ஆகிய இடங்களிலுள்ள இலங்கை அரச வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து 10.65 மில்லியன் ரூபா திருடப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவொன்று நேற்று அதிகாலை ATM இயந்திரத்தின் கணினியை ஹேக் செய்து மென்பொருளில் உள்ள தரவுகளை மாற்றி பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மூன்று நகரங்களிலும் திருட்டு நடந்த விதத்தினை பார்க்கும் ஒரே குழுதான் திருட்டுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய ஹிக்கடுவ, காலி மற்றும் பத்தேகம பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.