4.4 மில்லியன் ரூபா பெறுமதியான நகை கொள்ளை; கடவத்தையில் சம்பவம்

கடவத்தை நகரில் உள்ள வங்கி வளாகத்துக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4.4 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரின் மனைவி புகார் அளித்துள்ளார். கடவத்தையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் பாதுகாப்பு வைப்பு லாக்கரில் வைப்புச் செய்வதற்காக கொண்டு வரப்பட்டபோதே குறித்த பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கந்தலியத்தபலுவ பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களால் இந்த நகைகளை வங்கியில் பாதுகாப்பாக வைக்க கணவன்-மனைவி முடிவு செய்திருந்தனர்.

தனது கணவர் தம்மை தங்களுடைய குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு பின்னர் பஸ்ஸில் கடவத்தை நகருக்கு வந்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பஸ் நிறுத்தத்தில் இருந்து வங்கிக்கு நடந்து சென்றபோது குறித்த நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.