அனுமதி பெறாமல் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் அரச வங்கி ஒன்றில் கோடிக்கணக்கில் முதலீடு

சுற்றறிக்கையின் பிரகாரம் அனுமதி பெறாமல் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் அரச வங்கி ஒன்றின் நிலையான வைப்பு கணக்கில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2019, டிசம்பர் 31 ஆம் திகதியளவில் மொத்தமாக ஒரு கோடியே 92 லட்சத்து 61,864 ரூபாய் மற்றும் 2020 ஜனவரி மாதம் ஐந்து கோடியே 15 லட்சம் ரூபாயையும் அனுமதியின்றி முதலீடு செய்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் சிமெந்துக் கூட்டுத்தாபனம் தொடர்பாக நடத்திய கணக்காய்வு அறிக்கையிலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.