கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் நெருக்கடியில்

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் முறையிட்டுள்ளனர்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும், நிலவும் தேங்காய் விலையில் தங்கள் தயாரிப்புகளை மேற்கொள்வதற்கு தேவையான மூலப்பொருட்களுக்கு பெரும் செலவை சுமக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமது வாடிக்கையாளர்கள் பெருமளவு குறைந்துள்ளதாகவும், தற்போதைய மின்சார விநியோகத் தடை, மின்கட்டண அதிகரிப்பு என்பனவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பல தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மலையக மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.