பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர பொறுப்பேற்றார்..

பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றார்.

மத அனுட்டானங்களுடன் இந்த நிகழ்வுகள், பத்தரமுல்ல பெலவத்தவிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்றது.

பரீட்சை திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேனவின் ஓய்வு காரணமாக வெற்றிடமாக இருந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.