விமானப்படை தளபதியின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு நீடிப்பு

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் பதவிக்காலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆயுதப்படைகளின் பிரதானி என்ற வகையில் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2, 2020 அன்று, விமானப்படையின் 18ஆவது தளபதியாக எயார் மார்ஷல் பத்திரன அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

தளபதியின் பதவிக்காலம் டிசம்பர் 30, 2022 முதல் நீடிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.