பஸ் கட்டண குறைப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் விலை குறைக்கப்பட்டதையடுத்து பஸ் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பில் பஸ் நடத்துநர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

தேசிய பஸ் கட்டணக் கொள்கையின்படி எரிபொருள் விலை 4 வீதத்திற்கு மேல் குறைக்கப்பட்டாலோ அல்லது அதிகரிக்கப்பட்டாலோ பஸ் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும்.

ஆனால், கடந்த முறை ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் விலை குறைக்கப்பட்டபோது, ​​பஸ் கட்டணம் திருத்தப்படவில்லை.

தொடர்ந்து இரண்டு தடவைகள் ஒட்டோ டீசல் விலை குறைந்துள்ளதால் பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என தனியார் பஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.