பிணை பெற்று இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இப்போது பாகிஸ்தானில்?

கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று பிணை வழங்கப்பட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கருதப்படும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் தற்போது பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் போதைப்பொருள் வலையமைப்புடன் கஞ்சிபானி நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

அதன்படி, அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்வதாக உளவுத்துறையினர் சந்தேகம் வெளியிட்டதாக தெரிய வந்துள்ளது.

கஞ்சிபானி இம்ரான் டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் அவரை இலங்கையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.