அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு 550 வேலைவாய்ப்புகள்

வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில், இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகளைப் பெற முடிந்துள்ளது.
இதன்மூலம் 250 தாதியர்களும், 100 ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களும், 200 தாதியர் உதவியாளர்களும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெற முடியும் அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முழுமையான துணை நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.