2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக மகசீன் சிறைச்சாலை உட்பட நான்கு விசேட நிலையங்கள்

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக மொத்தம் நான்கு விசேட நிலையங்கள் நிறுவப்படவுள்ளன .

சிறைக் கைதிகளுக்கான விசேட நிலையமொன்று கொழும்பு மகசீன் சிறைச்சாலை வளாகத்திலும், இரத்மலானை மற்றும் தங்காலை ஆகிய இடங்களில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக இரண்டு நிலையங்களும்,.மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்காக மருத்துவமனையில் ஒரு நிலையமும் அமைக்கப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, உயர்தரப் பரீட்சை நாடு முழுவதும் 2,200 மையங்களில் நடத்தப்படவுள்ளது.

278,196 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உட்பட 331,709 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

2022 A/L பரீட்சைக்கு 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றவுள்ளனர்.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை இம்மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை காலத்தில் திட்டமிடப்பட்ட நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.