ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ் மாவட்ட தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கை“ சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலை இன்றையதினம் செய்தது

இன்று 21.01.2023 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

யாழ் மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் இதன்போது தாக்கல் செய்யப்பட்டன.

அதேவேளை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கை“ சின்னத்தில் தாக்கல் செய்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.