ஐ.எம்.எப் உடன் பேச்சுவார்த்தையை தொடரலாம் – இலங்கையின் கடன்களை ஒத்திவைக்கும் சீனா!

பொருளாதார மீட்சிக்கு இலங்கை அரசு சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியிருந்ததுடன், இலங்கை கோரிய கடனுதவியை வழங்குவது தொடர்பில் சில முக்கிய கோரிக்கைகளை சர்வதேச நாணயநிதியம் விடுத்திருந்தது.

அதில் முக்கியமாக அதிகளவான கடன்களை வழங்கியுள்ள நாடுகளுடன் இலங்கை கடன் மறுசீரமைப்புக்களை செய்து கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் விதித்த கோரிக்கைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு சீனா சாதகமான பதிலை அளித்துள்ளது.

 

 

இலங்கைக்கு அதிகளவான கடன்களை வழங்கியுள்ள நாடுகளில் சீனா முன்னணியில் உள்ளதுடன், அதிலும் முக்கியமாக சீனாவின் எக்சிம் வங்கி இலங்கைக்கு அதிக கடனை வழங்கியுள்ளது.

இந்தநிலையில், சர்வதேச நாணயநிதியத்தின் உதவியைப்பெற சீனாவின் உதவியை இலங்கை அரசு கோரியிருந்தது.

இலங்கையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சீனாவின் எக்சிம் வங்கி நிதியமைச்சர் என்ற அடிப்படையில் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் இரண்டு வருடங்களிற்கு இலங்கையின் கடன்களை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு சீனா தனது ஆதரவையும் வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.