ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு இடமில்லை – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எந்தவொரு செல்வாக்கும் இன்றி தாக்குதல் தொடர்பாக சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்றதாகவும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய அரசியல் இலக்குகள் மற்றும் பின்தங்கிய போக்குகளிலிருந்து விலகி நாட்டைக் கட்டியெழுப்பும் பொது வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்