படகில் சென்று தமிழகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானம்!

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சம்மேளனத்தின் தலைவர் புனித பிரகாஸ், கருத்துத் தெரிவிக்கையில் ” கடந்த முதலாம் திகதி இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்தோம்.

குறித்த மகஜர் கையளித்து 14 நாட்களுக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடில் வடபகுதி மீனவர்கள் 14 பேர் கடல் வழியாக படகு மூலம் தமிழகம் சென்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் ரவி, தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை ஆகியோரை சந்தித்துப் பேச தீர்மானித்துள்ளோம் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.