இலங்கை வந்தார் திருமதி உலக அழகி – 2022 சர்கம் கௌஷல்

திருமதி அழகி ஸ்ரீலங்கா – 2023 இன் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த திருமதி உலக அழகி – 2022 சர்கம் கௌஷல் இன்று சனிக்கிழமை ( 09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சர்கம் கௌஷல் வந்தடைந்தார்.

திருமதி அழகி – ஸ்ரீலங்கா போட்டியின் தேசிய பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க, தேசிய பயிற்சியாளர் ருக்மல் சேனாநாயக்க, திருமதி அழகி ஸ்ரீலங்கா போட்டி முகாமையாளர்  நிமேஷ் பஸ்நாயக்க ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று திருமதி உலக அழகி – 2022 சர்கம் கௌஷலை வரவேற்றனர்.

திருமதி அழகி ஸ்ரீலங்கா – 2023 இன் இறுதிப் போட்டியானது எதிர்வரும் புதன்கிழமை (13) மாலை 06.00 மணிக்கு கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இடம்பெறவுள்ளதுடன் இதில் இலங்கையை சேர்ந்த 23 திருமணமான பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த போட்டியில்  பிரதம விருந்தினராக பங்கேற்றதன் பின் இலங்கையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடவுள்ள திருமதி உலக அழகி – 2022 சர்கம் கௌஷல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) மீண்டும் இந்தியா திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.