அம்பாறை மாவட்டத்தின் ஊரடங்கு சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றது

. நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டமானது அம்பாறை மாவட்டத்திலும் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டமை இன்று அவதானிக்கப்பட்டது.

ராணுவத்தினரும் பொலிஸ் பிரிவினரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்ததும் அவதானிக்க முடிந்தது. அம்பாறை மாவட்டத்தில் சில பிரதேசங்களான காரைதீவு,சாய்ந்தமருது, கல்முனை,பாண்டிருப்பு, சகல வீதிகளும் வெறிச்சோடி கிடந்தமை அவதானிக்கமுடிந்தது எல்லா வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும் அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்களையும் அங்கு அங்கே அவதானிக்க முடிந்தது.

வர்த்தக நிலையங்கள் எதுவும் திறக்கப்படாமையினால் அன்றாட கூலித்தொழிலார்கள் சில அசோகாரியங்களுக்கு உள்ளானார்கள். இருந்தும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன தொற்றினை முற்றிலும் நாட்டில் இருந்து இல்லாமல் ஆக்குவதற்கு மக்கள் ஆகிய அனைவரும் இணைந்து செயப்படுவதன் மூலமேதான் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்பது உண்மையான விடையமாகும்.

மக்கள் முழு அவதானத்துடன் அரசாங்கத்தினால் விடுக்கப்படுகின்ற அறிவுறுத்தலையும்,சுகாதார திணைக்களத்தினரின் ஆலோசனைகளையும், வைத்தியர்களின் அறிவுரைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்கும் சர்ந்தப்பத்தில் கொரோனவை முற்றாக இல்லாமல் தடுக்கலாம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.