விமானத்தில் வழங்கப்பட்ட உணவுக் கழிவுப் பெட்டிகள் கிளிநொச்சி வீதிகளில்: அகற்ற நடவடிக்கை!
விமான நிலையத்தில் வழங்கப்படும் உணவு பொதிகள் அடைத்துவரும் கழிவுப் பெட்டிகள் கிளிநொச்சி குளத்தின் வீதிகளின் இருமருங்கிலும் வீசப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வந்த இந்திய யாத்திரிகர்கள் விமான நிலையத்தின் ஊடாக கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்திலுள்ள கொரோனா தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்துவரப்பட்டனர். வரும்போது உணவுக் கழிவுப் பெட்டிகளை இவ்வாறு வீசியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீபவன், குறித்த இடத்திற்குச் சென்று இதனைப் பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், உணவுக் கழிவுப் பெட்டிகளை நேரில் வருகை தந்து பார்வையிட்டு அகற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உள்ளதாக தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை