கொரோனாவால் ஏ – 9 வீதிக்கு மூடுவிழா வைத்த இராணுவம்

ஓமந்தை மற்றும் கனகராயன்குளம் பகுதிகளில் இராணுவத்தினர் புதிதாக சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளதுடன் நேற்று மாலை 6 மணிக்குப் பின்னர் ஏ – 9 வீதியையும் இழுத்து மூடியுள்ளனர்.

பொலிஸாரின் தற்காலிக அனுமதிப் பத்திரத்தை வைத்திருப்பவர்கள் மாத்திரம் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் குறித்த வீதியால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று இனங்காணப்பட்டதையடுத்து வடக்கு மாகாணத்துக்கான ஊரடங்கு சட்டக் காலம் நீடிக்கப்பட்டுள்ள நிலையிலும், இம்மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் வாழும் மக்கள் தாங்கள் வாழும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஏ – 9 வீதி இராணுவத்தினரால் தற்காலிமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.