தொலைபேசிக் கட்டணம் செலுத்த கால அவகாசம்! – கோட்டாவின் பணிப்புரையை அடுத்து தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அனைத்து ரெலிகொம் தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள், கேபிள் டிவி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களைச் செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தகவல்களைப் பரிமாறுவது இக்காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமானது. இந்நிலையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அனைத்துக் கொடுப்பனவுகள் நுகர்வோருக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு நிவாரண காலமாகக் கருதி சேவையை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு அனைத்து டெலிகொம் தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும்  கேபிள் டிவி சேவைகளை வழங்குவோருக்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முன்னர் செலுத்த வேண்டிய வாடிக்கையாளருக்கான அவசர கடன் வசதி மற்றும் மேலதிக உரையாடல் காலத்தைப் பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.