பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை – அலட்சியமாக இருந்த 15 பேர் கைது

ஊரடங்கு தளர்த்தப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை கடைபிடிக்க தவறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்படும்போது பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை விடயங்களை அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தபோதும் அதனை மீறிய 15 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1589 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 3 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 362 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.