அரியாலை ஆராதனைக்கு சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மதபோகரின் வழிப்பாட்டில் வவுனியாவில் இருந்து கலந்துகொண்டவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – அரியாலையில் போதனையில் ஈடுபட்ட மதபோதகருக்கு கொரனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் இருந்து குறித்த நிகழ்விற்கு சென்ற 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இவர்களில் நெளுக்குளத்தை சேர்ந்த ஒருவரும், புளியங்குளத்தை சேர்ந்த ஒருவருமாக இருவருக்கு உடலில் உபாதைக்குணம் இருப்பதை அறிந்து பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொதுசுகாதார பரிசோதகர்கள் சிரமம் பாராது அவர்களை உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது தொடர்பிலான கண்காணிப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை