வடக்கு மாகாணம் கொழும்பில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெள்ளிவரை நீடிப்பு!

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு மீளவும் மதியம் 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாளை நண்பகல் 12 மணிக்கு நடைமுறைத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஏனைய 17 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விதிக்கப்பட்டு வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும். மேலதிக அறிவிப்பு வரும்வரை வியாழக்கிழமை நண்பகலில் அந்த 17 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.