முதியவர்கள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஜீவனோபாயக் கொடுப்பனவுகளுக்கு மாற்றுவழி!

அஞ்சல் அலுவலகத்தினால் வழங்கப்பட்டுவந்த முதியவர்கள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஜீவனோபாயக் கொடுப்பனவுகளை கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

இதன்படி, மார்ச் மாதத்திற்கான முதியவர்கள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஜீவனோபாயக் கொடுப்பனவுகள் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்படவுள்ளது.

குறித்த கொடுப்பனவுகளைப் பெறும் முதியவர்கள் தத்தம் பிரதேச கிராம உத்தியோகத்தர்களைத் தொடர்புகொண்டு தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் கிராம உத்தியோகத்தர்களைச் சந்திப்பதற்கு முன்னர் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கம், அந்ததந்த மாகாண சபைகளால் முதியவர்கள், வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் அலுவலகம் ஊடாகவே இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்த போதிலும் தற்போதைய நிலையில் அந்த நடவடிக்கையை முன்னெடுப்பதில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்த பாதுக்காக்க முதியவர்கள், நோயாளர்கள் ஒரே இடத்தில் ஒன்று சேர்வதைதத் தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.