யாழ்ப்பாணத்திற்கு 407 மில்லியன் ரூபாய் அவசர தேவை – அரசாங்கத்திடம் அங்கஜன் கோரிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 64 ஆயிரத்து 278 குடும்பங்களுக்கு உலர் உணவு தேவையை நிறைவு செய்வதற்கு 407 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு அவசரமாக ஒதுக்கீடு செய்ய ஆவன செய்யுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வறுமை ஒழிப்பு செயலணியிடம் மாவட்டச் செயலர் ஊடாக முன்னுரிமை அடிப்படையில் இந்த நிதியை ஒதுக்கீடு செய்து வழங்குமாறு அவர் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்ததாவது, “நாடுமுழுவதும் கோரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட அடிப்படையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், சிறப்புத் தேவையுடையோரை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள், நாளாந்த கூலி பெறும் விவசாய வேலையாட் குடும்பங்கள், கடற்தொழிலாளர் குடும்பங்கள், கட்டுமானத் தொழிலாளி குடும்பங்கள், பனைசார் உற்பத்தியாளர் குடும்பங்கள், போக்குவரத்து உதவியாளர் குடும்பங்கள் மற்றும் நாளாந்த கூலி பெறும் தகுதியான குடும்பங்கள் என பிரதேச செயலாளர்கள் ஊடாக கணக்கெடுப்புச் செய்யப்படவுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 64 ஆயிரத்து 278 குடும்பங்களுக்கு உலர் உணவு தேவையை நிறைவு செய்யப்படவேண்டும் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 4 ஆயிரத்து 600 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

முன்று அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 4 ஆயிரத்து 600 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

மூன்று அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 400 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 4 ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

நான்கு அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 600 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 6 ஆயிரத்து 400 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

ஐந்து அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 7 ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 407.356 மில்லியன் ரூபாய் நிதி முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யுமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் ஊடாக வறுமை ஒழிப்புச் செயலணியிடம் கேட்டுள்ளோம்” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.