முட்டையின் விலை 10 ரூபாயாக நிர்ணயம்!

இன்று முதல்  முட்டையின்  விலை  10 ரூபாயாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இன்று(திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும்  அனைத்து முட்டை உற்பத்தியாளருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது பிரதமர்  விடுத்த  கோரிக்கைக்கு   அவர்கள்  இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய  நிலைமையினை   கருத்திற்  கொண்டு  முட்டையின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்கவிடம்  குறிப்பிட்டார்.

இதற்கமைய  இன்று முதல்  ஒரு முட்டையின் விலை  பத்து  ரூபாயிற்கு  விற்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சதோச மற்றும்  ஏனைய  விற்பனை  நிலையங்கள் ஊடாக  குறைந்த  விலையில்  முட்டைகளை  பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு மாறாக அதிக விலையில் முட்டையினை  விற்பவர்கள் தொடர்பாக 0372293300  என்ற  இலக்கத்திற்கு  அழைத்து பொது  மக்கள்  முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.