கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

222 பேர் மருத்துவ கண்காணிப்பிலுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 45 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 3 ஆயிரத்து 506 பேர் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.