நாடாளுமன்றத்தினை மீண்டும் கூட்டுவதன் ஊடாகவே நெருக்கடியை தவிர்க்க முடியும் – ரணில்!

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் புதிய நாடாளுமன்றம் கூடும் வரை நிதியை செலவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளுக்காக நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டியது அவசியம்.

இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அன்று முதல் புதிய நாடாளுமன்றம் கூடும் வரை எவ்வித நிதியையும் செலவிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.

புதிய நாடாளுமன்றத்தை எப்போது கூட்ட முடியும் என்பதை கூற முடியாது. இது நெருக்கடி நிலை. பழைய நாடாளுமன்றத்தை மீளக் கூட்டி தேவையான நிதியை பெறுவதன் மூலமே இந்த நெருக்கடியை தவிர்க்க முடியும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.