உடனடியாக சர்வகட்சி மாநாட்டை கூட்டுங்கள்- சஜித் அவசர வேண்டுகோள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதனை தீவிரமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் சர்வக்கட்சி மாநாடு ஒன்றைக் கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முகங்கொடுப்பதற்கும், அதிலிருந்து மீள்வதற்கும் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என அவர் குற்ப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுதியிருக்கும் கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

குறித்த கடிதத்தில் “முழு உலகுமே தற்போது நெருக்கடி நிலையொன்றுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இலங்கையும் அவதானத்திற்குரிய நாடாக மாறியிருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை குழப்ப நிலைக்கு உட்பட்டிருக்கிறது.

நாட்டில் சுகாதாரப் பிரிவு, பாதுகாப்புப் பிரிவு, ஊடகப்பிரிவினர் தற்போது அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் அதேவேளை, அவர்களது பணிக்கான கௌரவத்தையும் வெளிப்படுத்துகிறேன்.

அதேவேளை, இச்சவாலுக்கு முகங்கொடுத்து, அதிலிருந்து மீள்வது எம் அனைவருக்கும் உரிய பொதுவான சமூகப் பொறுப்பாகும். இந்நிலையில் வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முகங்கொடுப்பதற்கும், அதிலிருந்து மீள்வதற்கும் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்காக சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.