மஹிந்த தலைமையில் ஆரம்பமானது அனைத்து கட்சி கூட்டம் – மைத்திரி, ரணில் பங்கேற்பு
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சுறுத்தலைக் கையாள்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனைத்து கட்சிகளினதும் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார்.
சற்றுமுன்னர் ஆரம்பமான இந்த கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சிறு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெப்பநிலை சோதனை, முகமூடிகள், கை சுத்தப்படுத்துதல், இடைவெளியுடன் கூடிய இருக்கை போன்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்த்க்கது.
கருத்துக்களேதுமில்லை