மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப்படை தளபதி பதவியேற்பு

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

2006 ஜூன் மாதம் 12ஆம் திகதி விமானப் படையின் 12வது விமானப்படைத் தளபதியாக பதவியேற்ற ரொஷான் குணதிலக்க 2011 பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஓய்வுபெற்றார்.

வானூர்தி நிபுணராக நீண்டகாலம் சேவையாற்றிய ரொஷான் குணதிலக்க, இலக்கம் 03 கடல் கண்காணிப்பு படையணி மற்றும் 04வது வானூர்தி படையின் கட்டளை அதிகாரியாகவும் சிறிது காலம் சேவையாற்றியுள்ளார்.

விமானப்படையில் பல்வேறு பதவிகளை வகித்த அவர், விமானப்படை தளபதியாக பதவி வகிக்கையில் விமானப்படையின் பல்வேறு துறைகளை நவீனமயப்படுத்தி வெற்றிகரமாக யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர பங்களிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்