யாழ். மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நாளை முதல் உலர் உணவுப்பொருட்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் உதவித் திட்டம் அரசினால் நாளை (புதன்கிழமை) காலையிலிருந்து முன்னெடுக்கப்படும் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் அன்றாடம் கூலித்தொழில் செய்து  வரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் விவரம் அந்தந்த கிராம சேவகர் ஊடாக நேற்றைய தினம் திரட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது கோதுமை மா மாத்திரம்  யாழ்ப்பாணம் மாவட்ட செயலக இடர் முகாமைத்துவபிரிவிற்கு கிடைத்துள்ளது. அதனால் நாளை காலை முதல் பிரதேச செயலர்கள் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 64 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்க 407 மில்லியன் ரூபாய் நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்