அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்படும் இல்லை – சமல்

அத்தியாவசிய உணவு பொருட்களை எவ்வித தட்டுப்பாடுமின்றி குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், பொருட்களை மக்கள் கொள்வனவு செய்யும் போது  ஒரு  இடத்தில் ஒன்றுக் கூடுவதை  தவிர்ப்பதற்கு தற்போது பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொருட்களை மக்கள் கொள்வனவு செய்யும் போது  ஒரு  இடத்தில் ஒன்றுக் கூடுவதை  தவிர்ப்பதற்கு தற்போது பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய  அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய உணவு  பொதி 500 ரூபா தொடக்கம் 1000 ரூபா வரையில் மானிய முறையில் வீடுகளுக்கு சென்று  விற்பனை முகவர்கள் ஊடாக  விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளைஇ  மீகொட மற்றும் நாரஹேன்பிடிய  ஆகிய  மொத்த விற்பனை நிலையங்களில் இருந்து  உணவு பொருட்கள்  நாடு தழுவிய ரீதியில்  விநியோகிப்பதற்கான  நடவடிக்கைகள்,  எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே உணவு பொருட்களில் எவ்வித தட்டுப்பாடும் கிடையாது பல மாதங்களுக்கு  தேவையான பொருட்கள் கைவசம் உள்ளது.1 இலட்சம் முட்டை, 5000 ஆயிரம் யோகட்  ஆகியவற்றை  வழங்க   இணக்கம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம்  தற்காலிகமாக  நீக்கப்படும் வேளையில் பொது மக்கள்  சுகாதார  மற்றும் பாதுகாப்பு  வழிமுறைகளை   பின்பற்றி  அமைதியான முறையில் விற்பனை நிலையங்களில்  பொருட்களை   குறுகிய  நேரத்திற்குள்  கொள்வனவு செய்துக் கொள்ள  வேண்டும்.

கொரோனா   வைரஸ் ஒழிப்பிற்கு   எதிராக   அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து  செயற்பாடுகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு  வழங்குவது அவரவர் பொறுப்பாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.