102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது – சுகாதார அமைச்சு
கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 5 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை இரண்டு நோயாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வௌியேறியுள்ளனர் என்றும் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 229 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார மேம்பட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொழும்பு ஐ.டி.எச்.வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வைத்தியசாலையில் பணியாற்றிய சமூக வைத்திய நிபுணர் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை