கொரோனாவை எதிர்கொள்ள மிகச் சிறந்த நுட்பங்கள் அவசியம் – உலக சுகாதார ஸ்தாபனம்!
கொரோனாவை எதிர்கொள்ள மிகச் சிறந்த நுட்பங்கள் அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ரெட்றோஸ் அதானொம் கேப்றியேயிஸ் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் தத்தமது வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன். நபர்களுக்கு இடையில் குறித்தளவான இடைவெளியைப் பேணுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழிமுறைகளாகும் என அவர் கூறியுள்ளார்.
ஆனால் அவை தற்காப்பு நடவடிக்கைகள் மாத்திரமே. ஒரு காற்பந்தாட்ட விளையாட்டில் பந்தைத் தடுப்பதன் ஊடாக மாத்திரம் வெற்றியீட்ட முடியாது. நீங்கள் செயற்திறனாக பந்தை உதைப்பதும் அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இந்த கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு, நாம் மிகச் சரியான நுட்பங்களுடன் வைரஸை எதிர்த்துத் தாக்க வேண்டியது அவசியமாகும்.
வைரஸ் தொற்றுக்கான அறிகுறி காணப்படும் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, தொற்று உறுதிப்படுப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் அதேவேளை, அந்நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பைப் பேணிய அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவது முக்கியமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை