தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் விடுவிப்பு!

தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்.

இவர்கள் இன்று(புதன்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் கந்தக்காடு மற்றும் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளளார்.

நேற்றைய தினமும் இவ்வாறு அதிகளவானவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்