யாழ் பண்ணைப்பூங்கா பகுதியில் தொற்று நீக்கி மருந்து தெளிக்கும் விசேட செயற்திட்டம்….

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் செயற்றிட்டங்களில் ஓர் அம்சமாக யாழ் நகர் மற்றும் யாழ் பண்ணைப்பூங்கா பகுதிகளில் தொற்று நீக்கி மருந்து தெளிக்கும் விசேட செயற்திட்டம்  இன்று (25) விசேட அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோரினால் முன்னெடுக்கப்பட்டது.

கிருமி தொற்றை தடுக்கும் கவச ஆடைகளுடன் விசேட அதிரடிப்படையினரினால் பாதுகாப்புடன் மக்களின் செறிவானநடமாட்டம் உள்ள யாழ் நகர் மற்றும் பண்ணைப்பூங்காவை அண்டியபகுதிகளில் இந்த தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.