வவுனியாவில் விசேட அதிரடிப் படையினருடன் களமிறங்கிய சுகாதாரப் பிரிவு!

வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் மக்கள் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தொற்று நீக்கும் செயற்பாட்டை மடுக்கந்த விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா, நகர சபையினரின் பூரண ஒத்துழைப்புடன் சுகாதாரப் பிரிவினரும் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து குறித்த வேலைத் திட்டத்தினை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், புகையிரத நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் நகரில் மக்கள் கூடும் பகுதிளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, நகரசபையின் உப நகரபிதா சு.குமாரசாமி, அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எம்.சந்துன் தலைமையிலான பொது சுகாதாரப் பரிசோதகர் அணியும் பங்கேற்றிருந்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.