ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு!
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் இன்றைய தினம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி ஊடாக தங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினை அவதானிக்க முடிந்தாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தற்போதைய நிலையில் வீட்டில் பிள்ளைகளுடன் அன்பாகவும், அரவணைப்புடனும் நடந்து கொள்வது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை