இதுவரை கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை- அறிக்கை வெளியானது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மாலை 4 வரையான காலப்பகுதியில் எவரும் அடையாளம் காணப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நேற்றுவரையான உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 255ஆக உள்ளதுடன் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்து 3 பேர் கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்