வலி.வடக்கு மக்களுக்கு விது நம்பிக்கை நிதியம் உதவி!
கோவிற் 19 (கொரோனா) தாக்கதினால் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் நாளாந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதார நிலை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அத்தியாவசிய தேவையினை பூர்த்தி செய்ய இடர்படும் மக்களிற்கான உலர் உணவுப் பொதிகள் பிரதேச செயலாளர் மற்றும் வலிவடக்குபிரதேச சபை தவிசாளர்களின் வழிகாட்டலின் கீழ் கிராம சேவகர்களின் உதவியுடன் இனம் காணப்பட்டு கர்பிணி தாய்மார்கள், குழந்தைகளை உள்ளடக்கிய குடும்பங்கள் உட்பட 142 குடும்பங்களிற்கான உலர் உணவு பொதிகள் விது நம்பிக்கை நிதிய அறங்காவலர்கள் தன்னார்வ தொண்டர்களால் பொதி செய்யப்பட்டு மாவிட்டபுரத்தில் விது நம்பிக்கை நிதிய பங்காளர் (பேபி கடையிலும்) ஸ்ரீ முருகன் கபேயிலும் மற்றும் ஒவ்வொரு கிராமங்களிற்கும் நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது.
இவ் பணியினை ஊரடங்கு அமுலான நேரத்திலும் மேற்கொள்வதற்கு சிறப்பு அனுமதி பெற்று வழங்கி உதவிய தவிசாளர் மரியாதைக்குரிய சுகிர்தன் அவர்களிற்கும் பிரதேச செயலாளர், கிராமசேவகர்கள், விது நம்பிக்கை நிதிய தன்னார்வ தொண்டர்களிற்கும் விது நம்பிக்கை நிதியம் இருகரம் கூப்பி நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.
கருத்துக்களேதுமில்லை